Friday, May 27, 2016

வாழ்த்தலாம் வாங்க!!

சமீபத்தில் நடந்து முடிந்த பத்தாம் வகுப்புத் தேர்வில், நமது ஊரைச் சார்ந்த பால் அண்ணன் மகள் 500 மதிப்பெண்ற்கு 490 மதிப்பெண் எடுத்திருக்கிறாள் என்று வாட்ஸ்அப் லில் தெரிவித்த போதே எனக்கு ஒருவித பெருமிதம் முகத்தில் மிளிர்ந்தது. காரணம் இன்றைக்குப் பெரு நகரங்களில் உள்ள பள்ளிகளில் படிப்பவர்கள் தான் அதிக மதிப்பெண் வாங்க முடியும் என்ற மாயைக்குச் சிக்கியிருக்கும் மக்களின் நடுவில் நமது கிராமங்களில் உள்ள பள்ளியிலும் படித்து அதிக மதிப்பெண்கள் வாங்க முடியும் என்று நிரூபித்த மாணவி அஸ்னி க்கு நமது பண்டாரக்காடு வாட்ஸ்அப் நண்பர்கள் குழுமம் சார்பாக வாழ்த்துக்களும் பாராட்டுகளும்!!

                                               மாணவியின் பெயர்: பி.அஸ்னி
                                               தந்தையின் பெயர்: பி.பால் ததேயுஸ்
                                               தாயின் பெயர்: கே.ஆர்.பிரபா



நமது கல்வியின் நீண்ட பயணத்தில், நமக்கு அடித்தளம் அமைத்து நம்பிக்கையைக் கொடுத்து தொடர்ந்து முன்னேற வாய்ப்பைக் கொடுப்பது அரசால் நடத்தப்படும் பத்தாம் வகுப்புத் தேர்வுகள். அதில் நாம் சிறப்பாக செயல் படும் போது, தொடர்ந்து எதை நோக்கி நாம் பயணிக்க போகிறோம் என்பதற்கான வழி தெளிவாக புலப்படுகிறது. மாணவி அஸ்னி யின் மருத்துவர் ஆக வேண்டும் என்ற கனவு நனவாகக் கண்டிப்பாக இந்த வெற்றி அவருக்கு அடித்தளமாகவும் ஊக்கமாகவும் அமையும்.

இந்த வெற்றியைப் பற்றி மாணவி அஸ்னி கூறும் போது, மாநில அளவில் முதல் மதிப்பெண் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் தான் விடா முயற்சியோடு படித்தேன், அதை இந்த முறை தவறவிட்டாலும் பிளஸ் டூ தேர்வில் சாத்தியம் ஆக்குவேன் என்ற நம்பிக்கை எனக்குள் இருக்கிறது, அதற்கு இதுவரையிலும் என்னுடன் உறுதுணையாக இருந்த என் பெற்றோர்கள் வழிகாட்டுவார்கள். இந்தத் தேர்வில் நல்ல மதிப்பெண் எடுப்பதற்கு உதவியாக இருந்த ஆட்லின் மெட்ரிக் பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகத்தினருக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன்.

வாங்க மக்கா!! நம்ம ஊர் பொண்ணு நல்ல மார்க் எடுத்திருக்கா!! ஒண்ணும் சொல்லாம போனா எப்படி??

வாழ்த்திருவோம்!!


.

4 comments:

  1. மென் மேலும் வெற்றிகள் பல அடைய வாழ்த்துகிறோம் ....

    ReplyDelete
  2. பாரட்டுக்கள் அஸ்னி!!, உங்களுடைய மருத்துவ கனவு நனவாக என்னுடைய‌ வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள்...

    ReplyDelete